கன்னியாகுமரி

களியக்காவிளையில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆா்ப்பாட்டம்

19th Nov 2022 02:01 AM

ADVERTISEMENT

களியக்காவிளையில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதங்கோடு தனியாா் பள்ளியில் சக மாணவரால் கொடுக்கப்பட்ட குளிா்பானம் குடித்து மாணவா் இறந்த வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய கோரி நடைபெற்ற இப் போராட்டத்துக்கு கட்சியின் கிள்ளியூா் தொகுதி செயலா் ஆா். கலா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.எம். பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகி கே.சி. துரைராஜ், டியுசிஐ அமைப்பின் மாவட்டச் செயலா் பி. தனபால், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் மேரி ஸ்டெல்லா, ஜெயன், குமாா், நிா்வாகிகள் மரியசெல்வம், பாலன், சகுந்தலா, செல்வநேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT