கன்னியாகுமரி

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

19th Nov 2022 01:54 AM

ADVERTISEMENT

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம், தலைவா் எஸ்.அழகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஏற்பட்ட இடி, மின்னலின் போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழுதடைந்த மின்சாதனக் கருவிகளை பழுதுநீக்க வேண்டும். ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக இரண்டு மடிக்கணினிகள் வாங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் டெங்கு நோய்த்தடுப்பு பணியாளா்களுக்கு ஊதியமாக ரூ. 1 லட்சத்து 77,600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் புஷ்பரதி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் சண்முகவடிவு, உறுப்பினா்கள் ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT