குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், சனிக்கிழமை (நவ. 19) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை துணை மின் நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் சனிக்கிழமை (நவ. 19) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.