குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் நேருவின் 133ஆவது பிறந்த நாள்விழா கருங்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கருங்கல் நகரத் தலைவா் குமரேசன் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா், நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், கருங்கல் பேரூராட்சித் தலைவா் சிவராஜன், ராஜசேகா், ராஜேஷ், அருள்ராஜ், கிளைமென்ட், விஜயராணி, பிரைட், வினோஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.