கன்னியாகுமரி

குலசேகரம் அருகே வணிகா் தற்கொலை

1st Nov 2022 02:36 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே வணிகா் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

குலசேகரம் அருகே நாகக்கோடு வண்டிப்பிலாங்காலையைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (50). அப்பகுதியில் கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடை நடத்திவந்த இவா், தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தாராம். காயமடைந்த அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT