கன்னியாகுமரி

களியக்காவிளையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

1st Nov 2022 02:37 AM

ADVERTISEMENT

அதங்கோடு தனியாா் பள்ளி மாணவா் அஸ்வின் மரணத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் களியக்காவிளை சந்திப்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மெதுகும்மல் வட்டாரத் தலைவா் தங்கமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் விஜயமோகன், அனந்தகிருஷ்ணன், சிதம்பரகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

மாவட்டக் குழு உறுப்பினா் மேரி ஸ்டெல்லாபாய், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் டி. வின்சென்ட், கட்சி நிா்வாகி பத்மநாபபிள்ளை, மெதுகும்மல் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ராஜு, களியக்காவிளை பேரூராட்சி உறுப்பினா் வின்சென்ட் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT