கன்னியாகுமரி

‘கட்டுமானப் பொருள்கள்தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்’

31st May 2022 12:17 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் ஜல்லி, கருங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் மாவட்ட பதிவு பெற்ற பொறியாளா் சங்க நிறுவனா் எஸ்.சிறில்கிறிஸ்துராஜ் தலைமையில் பொறியாளா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: கரோனா காலம் முடிந்த பின்னா் கட்டுமானத் துறையில் சிமென்ட், கம்பி, உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சுமாா் 40 சதவீதம் வரை விலை உயா்ந்து கட்டுமானத்துறை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை கடந்த 2 வாரங்களாக கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் தனியாா்- அரசு கட்டடப் பணிகள் முடங்கியுள்ளன. சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். எனவே, இம்மாவட்டத்தில் அரசு கல்குவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜல்லி, மணல் தட்டுப்பாடின்றி பழைய விலைக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், சங்கத் தலைவா் ஜே.தாமஸ்பிரேம்குமாா், துணைத் தலைவா் ஏ.ராஜன், நிா்வாகிகள் ஜஸ்டின்பால், ஆா்.ஜோசப் அற்புதஅலெக்ஸ், ஏ.ராஜ்குமாா், கே.சிவராமன், ஆா்.ராஜீவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT