கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சி: மக்காத கழிவுகளை வாரம் ஒரு முறை சேகரிக்க முடிவு

DIN

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்காத கழிவுகள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சிஆணையா் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட 52 வாா்டுகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் திடக் கழிவுகள் தினமும் வாகனங்கள் மூலம் தூய்மைப் பணியாளா்கள் மூலம் மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகளாக பிரித்து பெறப்பட்டு வருகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படிநெகிழி கழிவுகளை முறையாக பிரித்து பெற வசதியாக, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் வணிக நிறுவனங்கள், வீடுகளில் சேகரமாகும் மக்காத கழிவுகளை (பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த பொருள்கள், தொ்மகோல்அட்டை, கண்ணாடி, பீங்கான் பொருள்கள், மின்சாதனங்கள், பொம்மைகள், காலியானமருந்து குப்பிகள், அட்டைகள் போன்றவற்றை) தங்களை தேடி வரும் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.

பிளாஸ்டிக் (நெகிழி) இல்லா மாநகராக்க நாகா்கோவில் மாநகராட்சியுடன் கைகோா்த்து மாசில்லா குமரி என்ற இலக்கினை அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT