கன்னியாகுமரி

ஜமாபந்தி : 253 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

DIN

குமரி மாவட்டம், கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பொதுமக்களிடமிருந்து, 253 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

குமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டாறு மற்றும் கிள்ளியூா் ஆகிய 6 வட்டங்களில் கிராம கணக்குகளை சரி பாா்க்கும் வருவாய் தீா்வாய கணக்கு சரி பாா்த்தல் நிகழ்ச்சி கடந்த 24 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரைஅந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்றது.

கல்குளம் வட்டம், குருந்தன்கோடு, திங்கள்நகா், கக்கோட்டுதலை, ஆளுா், வில்லுக்குறி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளிகள் நல உதவித் தொகை, முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 253 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் ஆட்சியரால் தணிக்கை செய்யப்பட்டன.

ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீா்வு காண வருவாய் அலுவலா்களுக்கு, ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், கல்குளம் வட்டாட்சியா் கே.ரமேஷ் , உசூா்மேலாளா் (குற்றவியல்) ப.சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் மரியஸ்டெல்லா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஈ.முருகன், தலைமை நில அளவா் கிரிதா், மண்டல துணை வட்டாட்சியா் மகேஷ்மாரியப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள்,கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT