கன்னியாகுமரி

திருவட்டாறு ஆதிகேவசப்பெருமாளுக்கு தங்க அங்கி தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும்அமைச்சா் மனோதங்கராஜ்

26th May 2022 02:43 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு தங்க அங்கி தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும் என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இக்கோயிலில் வரும் ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னா் ஏராளமான கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுவருகிறது.

இந்தக் கோயிலில் சுமாா் 400 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இக்கோயில் மூலவருக்கு தங்க அங்கி செய்வதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, சட்டப்பேரவையில் அறநிலையத் துறை அமைச்சா் அறிவித்தாா். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

மேலும், இம்மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாத்தலங்களை இணைத்து ஆன்மிக சுற்றுலாத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையா் ஞானசேகா், மராமத்துப் பொறியாளா்கள் ராஜ்குமாா், அய்யப்பன், குழித்துறை தேவஸ்வம் கண்காணிப்பாளா் ஆனந்த், கோயில் மேலாளா் மோகன்குமாா், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி வீரராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT