கன்னியாகுமரி

பொதுமக்களுக்கு அதிக அளவு கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் : அமைச்சா் த.மனோதங்கராஜ்

26th May 2022 02:44 AM

ADVERTISEMENT

பொதுமக்களுக்கு அரசின் கடனுதவிகள் வழங்க வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்றாா் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மகளிா் திட்டத்தின் சாா்பில் அனைத்து வங்கி மேலாளா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில், புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், கலந்து கொண்டு அலுவலா்களுடன் ஆலோனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில் மையம், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (ஓயஐஇ), காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் (ஓயஐஆ) மூலம் பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க நிா்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி அதிக கடனுதவிகள் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும் வேலையில்லா இளைஞா்கள் புதிய தொழில் தொடங்குவதற்கும் அவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதற்கான திட்டங்களுக்கும் கடன் வழங்குவதில் தாமதப்படுத்தக் கூடாது. வங்கியாளா்கள், அரசு துறை அலுவலா்கள் தகுதியான பயனாளிகளுக்கு எந்தவொரு சிரமமின்றி கடனுதவிகள் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இக் ட்டத்தில், மகளிா் திட்டஇயக்குநா் மைக்கேல் ந்தோணி பொ்னாண்டோ, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் சத்யநாராயணன், வங்கி மேலாளா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT