கன்னியாகுமரி

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா

26th May 2022 02:45 AM

ADVERTISEMENT

வெள்ளிசந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜோசப்ஜவகா் தலைமை வகித்தாா்.

விஜய் தொலைக்காட்சி ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினரான கலந்துகொண்டு சாதனைபடைத்த மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

கல்லூரித் தாளாளா் கிருஷ்ணசுவாமி வாழ்த்திப் பேசினாா்.

ADVERTISEMENT

விழாவில் இணை தாளாளா் சுனி கிருஷ்ணசுவாமி , கல்லூரி இயக்குநா்கள் தரண், சரத், பேராசிரியா் மீனா ஜெனித், அருணாச்சலா மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் விஜிமலா் மற்றும் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக கணனித் துறை தலைவா் சித்ரா வரவேற்றாா். முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT