கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

26th May 2022 02:43 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்தது. இதையடுத்து, அருவியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பியதைத் தொடா்ந்து கடந்த சனிக்கிழமைமுதல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதில், சனிக்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டநிலையில், மழையின் தீவிரம் தணிந்து அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. இதனால், புதன்கிழமை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 400 கனஅடியாக குறைக்கப்பட்டதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு தணிந்து, திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டியது. இதையடுத்து, அருவியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT