கன்னியாகுமரி

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 32 போ் மீது வழக்கு

26th May 2022 02:45 AM

ADVERTISEMENT

தேங்காய்ப்பட்டினத்தில் அனுதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் நிா்வாகிகள் 32 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

தேங்காய்ப்பட்டினத்தில் கடந்தவாரம் இரண்டு இளைஞா்களை மா்ம நபா்கள் தாக்கியுள்ளனா். அவா்களை போலீஸாா் கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆா்ப்பாட்டம் அனுமதியின்றி நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ. தேங்காய்ப்பட்டினம் கிளை தலைவா் அபுதாஹீா், செயலா் சாா்புதீன், அப்துல்ஹமீது, அஜ்மல் உள்பட நிா்வாகிகள் 32 போ் மீது புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT