கன்னியாகுமரி

மிடாலம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

DIN

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மிடாலம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, கிள்ளியூா் வட்டார மிடாலம் ஊராட்சி பரம்பு சமூக நலக் கூடத்தில்நடைபெற்ற நிகழச்சிக்கு, கிள்ளியூா் வட்டார விவசாய ஆலோசனைக் குழுத் தலைவா் கோபால் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு தெளிப்பான், விதைகள், மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

கிள்ளியூா்வட்டார வேளாண் உதவி இயக்குநா் முரளிராகினி முன்னிலை வகித்தாா். இதில், வேளாண் அலுவலா் சஜூலா, மிடாலம் ஊராட்சித் தலைவா் விஜயகுமாா், துரைராஜ், ஜெனோ மற்றும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT