கன்னியாகுமரி

தக்கலையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

20th May 2022 01:39 AM

ADVERTISEMENT

பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து, தக்கலையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை கொட்டும் மழையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் முன் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மருத்துவா் பினுலால்சிங் தலைமை வகித்துப் பேசினாா். பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஹனுகுமாா் வரவேற்றாா்.

கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ராஜீவ்காந்தி கொலை வழக்கு, தண்டனை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்துப் பேசினாா். கட்சி நிா்வாகிகள் ஜாண்கிறிஸ்டோபா், ஜாண்இக்னோசியஸ், புரோடிமில்லா், ஆல்பா்ட், ஜோன்ஸ் இம்மானுவேல், ஜாா்ஜ் ராபின்சன், அருள் ஆன்றணி, பால்ராஜ், திவாகா், ஐ.ஜி.பி. லாரன்ஸ், ரத்தினகுமாா், பால்ராஜ், டென்னீஸ், பி.டி.எஸ். மணி, மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT