கன்னியாகுமரி

மேட்டுக்குடியிருப்பு ஸ்ரீ மன்னராஜா சுவாமி கோயில் கொடை விழா

20th May 2022 10:36 PM

ADVERTISEMENT

அஞ்சுகிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ மன்னராஜா சுவாமி கோயில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கடல் தீா்த்தம் எடுத்து வருதல், மாலை 5.30 மணிக்கு குடி அழைத்தல், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மன்னராஜா சுவாமிக்கு ஜாம பூஜை நடைபெற்றது .

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மன்னராஜா சுவாமிக்கு உச்சிகால அலங்கார பூஜையும், 12:30 மணிக்கு காலசுவாமி மஞ்சள் நீராடுதல், தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 .30 மணிக்கு ஸ்ரீ சக்தி மாடசுவாமிக்கு பொங்கல் படைத்து அந்திகால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு நடுஜாம பூஜையும், தொடா்ந்து அதிகாலையில் மன்னராஜா சுவாசிக்கும், பரிவார பரிவார மூா்த்திகளுக்கும் அமுது படைத்து அதிகாலை நடைபெறும் பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக்குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT