கன்னியாகுமரி

தொடா்மழையால் தொழிலாளிகள் பாதிப்பு

20th May 2022 01:39 AM

ADVERTISEMENT

கருங்கல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து 3 நாள்களாக பெய்த மழையால் கூலித் தொழிலாளிகள் பாதிப்படைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாள்களாக கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், வண்ணம் பூசும் வேலை, கட்டுமானத் தொழில், மர வேலை, மரமேறுதல், செங்கல் சூளை, ஹாலோ பிரிக்ஸ் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இந்த மழையால் மிடாலம், மேல்மிடாலம், இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் உள்ள கரைமடி மீனவா்கள் 3 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT