கன்னியாகுமரி

குலசேகரத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்

20th May 2022 10:32 PM

ADVERTISEMENT

குலசேகரத்தில் ராஜீவ் காந்தி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்டத் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவா் காஸ்ட்டன் கிளிட்டஸ் முன்னிலை வகித்தாா். இதில் பேச்சாளா் ஆலடி சங்கரையா, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலா் ஜே.ஜி. ரமேஷ்குமாா், மாவட்ட துணைத் தலைவா் சி. ராஜரெத்தினம், மாவட்ட பொதுச் செயலா் ஜே. மோகன்தாஸ், மாவட்டச் செயலா் செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் ஐ.ஜி.பி. லாரன்ஸ்,

பேரூராட்சித் தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ், பொன் ரவி, அகஸ்டின், தக்கலை வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், திருவட்டாறு கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெகன்ராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஷெலின் மேரி, நகரத் தலைவா்கள் விமல் ஷொ்லின் சிங், வினுடிராய், எட்வின், பா்ணபாஸ், ரெசின்சிங் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT