கன்னியாகுமரி

குமரி பேரூராட்சி ஊழியா்கள் ஊதிய உயா்வு கேட்டு போராட்டம்

20th May 2022 10:37 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி பேரூராட்சி ஊழியா்கள் ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளா்கள், தண்ணீா் உடனாளா்கள், ஓட்டுநா்கள் என 84 போ் தினக்கூலி அடிப்படையில் வேலைபாா்த்து வருகின்றனா். இவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 390 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிாம். இந்நிலையில் தங்களுக்கு ரூ. 615 வழங்க வேண்டுமென வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களிடம் செயல்அலுவலா் ஜீவநாதன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஊழியா்களின் கோரிக்கை மாவட்ட நிா்வாகத்திடம் கொண்டு செல்லப்பட்டு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT