கன்னியாகுமரி

கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் சுகாதார விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

20th May 2022 10:36 PM

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் உத்தரவின்படி, பேரூராட்சிகளின் துணை இயக்குநா் குற்றாலிங்கம் அறிவுறுத்தலின்பேரில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மற்றும் உடையாா்விளை சந்திப்பில் கரோனா, டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய கலைநிகழ்ச்சியை செயல் அலுவலா் பிரகாஷ், பேரூராட்சி மன்றத் தலைவா் மனோகரசிங் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் பேரூராட்சி உறுப்பினா்கள் கில்பா்ட் ஜேக்கப், பீட்டா், சாந்தி, மேகலா, கவிதா, செல்வம் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT