கன்னியாகுமரி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாதானபுரம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினா் 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரம் ரவுண்டானாவில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், அப்பகுதியில் மின்விளக்குகள் எரியவில்லை என்றும், ரவுண்டானா பகுதியில் அறிவிப்பு பலகைகள் ஏதுமில்லாத காரணத்தினால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுவதாகவும் கூறி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவா் வை.தினகரன் தலைமையில் மகாதானபுரம் ரவுண்டானாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்திலி ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.