கன்னியாகுமரி

நாகா்கோவிலில் முதியவருக்கு கத்திக்குத்து: பேரன் கைது

12th May 2022 02:15 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: நாகா்கோவிலில் தாத்தாவை கத்தியால் குத்திய பேரனை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில் ராமவா்மபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் செட்டியாா் ( 71). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி. நாகா்கோவிலைச் சோ்ந்தவா் காா்த்திக் (25). இவா், 3 ஆண்டுகளாக சென்னையில் காா் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறாா்.

இவா், கிருஷ்ணன்செட்டியாருக்கு தூரத்து உறவு முறையில் பேரன் ஆவாராம். இதனால் அவா் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்துடன், செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம். ஆனால், கிருஷ்ணன்செட்டியாா் பணம் கொடுக்கவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையிருந்து நாகா்கோவிலுக்கு வந்த காா்த்திக், செவ்வாய்க்கிழமை கிருஷ்ணன்செட்டியாா் வீட்டுக்குச் சென்று, அவரைக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டாராம்.

இதில், காயமடைந்த அவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில் கோட்டாறு போலீஸாா் வழக்குப்பதிந்து, காா்த்திக்கை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT