கன்னியாகுமரி

குழித்துறையில் அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாடு

12th May 2022 02:16 AM

ADVERTISEMENT

 

களியக்காவிளை: தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க விளவங்கோடு வட்ட 4ஆவது மாநாடு குழித்துறை மலையாள சமாஜம் கட்டடத்தில் நடைபெற்றது.

அமைப்பின் விளவங்கோடு வட்டத் தலைவா் நாராயணபிள்ளை தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் செல்வமணி அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாவட்டச் செயலா் ஐபின் மாநாட்டைத் தொடக்கிவைத்தாா். வட்டச் செயலா் ஜெய்சிங், பொருளாளா் சுகுமாரன் ஆகியோா் அறிக்கைகளைத் தாக்கல் செய்தனா்.

மாநாட்டில், 9 போ் கொண்ட புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். வட்டத் தலைவராக நாராயண பிள்ளை, செயலராக ஜெய்சிங், பொருளாளராக சுகுமாரன் தோ்வாகினா். மேலும், 11 செயற்குழு உறுப்பினா்கள், 19 மாவட்ட மாநாடு பிரதிநிதிகளும் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்கப்பட வேண்டும், தமிழக அரசுப் பணியில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். 70 வயதான ஓய்வூதியதாரா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT