கன்னியாகுமரி

மலையோரப் பகுதிகளில் அக்னி நட்சத்தில் நாளில் மழை

5th May 2022 02:44 AM

ADVERTISEMENT

 

குலசேகரம்: அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளில் குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள் மற்றும் அணைப் பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து காணப்பட்டது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் புதன்கிழமை தொடங்கியது. அதே வேளையில் ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் மிதமான மற்றும் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT