கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

5th May 2022 02:50 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: நாகா்கோவில் கோட்டாறு ஆயா் இல்ல வளாக அரங்கில், குழந்தைக் கவிஞரும் மூத்த எழுத்தாளருமான கொற்றை வளவன் எழுதிய ‘அழகிய பூவும் ஆடிடும் பிஞ்சும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலக்கியப் பட்டறை தலைவா் தக்கலை மா. பென்னி தலைமை வகித்தாா். நூலை சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பொன்னீலன் வெளியிட, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஜேம்ஸ் ஆா். டேனியல் பெற்றுக்கொண்டு, நூல் ஆய்வுரை வழங்கினாா்.

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஜெசா் ஜெபநேசன், தேசோபகாரி முன்னாள் ஆசிரியா் விபின் ஜான், முனைவா் ஜெசின், வழக்குரைஞா் சவுந்தர்ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், எழுத்தாளா்கள் ஆசிா் டேவிட், முட்டம் வால்டா், ஆபிரகாம் லிங்கன், கண்ணப்பன், லீமாரோஸ், கீதா, மருத்துவா் சுரேஷ் பிள்ளை, திரளான வாசகா்கள் கலந்துகொண்டனா்.

எழுத்தாளா் குமரி ஆதவன் வரவேற்றாா். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தமிழாசிரியா் சுரேஷ் நன்றி கூறினாா். சிலம்பை டென்னிசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை அமுதசுரபி இலக்கிய இயக்கம், இலக்கியப் பட்டறை அமைப்பினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT