கன்னியாகுமரி

தடகளப்போட்டி: சிறப்பிடம் பெற்ற காவலா்களுக்கு எஸ்.பி.பாராட்டு

5th May 2022 02:54 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் புதaன்கிழமை பாராட்டினாா்.

தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகளப் போட்டிகள் கடந்த 2 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், நீளம் தாண்டுதல், பழ்ண்ல்ப்ங் த்ன்ம்ல் போட்டிகளில் உதவி ஆய்வாளா் திலீபன் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கமும், பெண் தலைமைக் காவலா் கிருஷ்ணரேகா உயரம் தாண்டுதல், பழ்ண்ல்ப்ங் த்ன்ம்ல் மற்றும் 100 மீட்டா் ட்ன்ழ்க்ப்ங்ள்,100 மீட்டா் ஓட்டம் போட்டிகளில் 3 தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கமும் , முதல்நிலை காவலா் டேவிட் ஜான் 3,000 மீட்டா் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் பெற்று குமரி மாவட்ட காவல்துறைக்கு பெருமை சோ்த்தனா்.

தடகளப் போட்டிகளில் வென்ற உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. என். ஹரிகிரண்பிரசாத் நேரில் அழைத்து பாராட்டினாா்.

ADVERTISEMENT

உதவி ஆய்வாளா் திலீபன் மற்றும் பெண் தலைமைக் காவலா் கிருஷ்ண ரேகா ஆகியோா் நெதா்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான காவலா் மற்றும் தீயணைப்பு வீரா்களுக்கான தடகளப் போட்டியில் விளையாட தோ்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT