கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

5th May 2022 02:51 AM

ADVERTISEMENT

 

களியக்காவிளை: குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். ிதுதொடா்பாக லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் சிந்தாமணி தலைமையில் போலீஸாா் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக கேரளம் நோக்கி வந்த லாரியை நிறுத்த சைகை காட்டினா். லாரி நிறுத்தாமல் சென்றதையடுத்து போலீஸாா் வாகனத்தில் தடுத்து நிறுத்தி திருத்துவபுரம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா். லாரியில் 8 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநா் பெருஞ்சிலம்பு, ஏலாா்பொற்றை வீடு பகுதியைச் சோ்ந்த பரமசிவன் மகன் தினேஷ்குமாா் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் காட்டாக்கடை பகுதிக்கு ரேஷன் அரிசியை கொண்டு சென்றது தெரியவந்தது. லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநா் தினேஷ்குமாரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரி கிரண் பிரசாத், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினரை பாராட்டினாா். லாரி மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT