கன்னியாகுமரி

குழித்துறையில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

5th May 2022 02:51 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: குழித்துறை நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாா்த்தாண்டம் தினசரி காய்கனி சந்தை, மீன் சந்தை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டதோடு, நுண்ணுயிா் உரக் கிடங்கு மையத்தில் ரூ.3.40 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கசடு கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், ரூ.1.57 கோடி மதிப்பில் நடைபெறும் பழைய இருப்பு குப்பைகள் தரம் பிரிக்கப்படும் பணி (கங்ஞ்ஹஸ்ரீஹ் ரஹள்ற்ங்) குறித்து கள ஆய்வு மேற்கொண்டதோடு, பேருந்து நிலையத்தையும் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆய்வு செய்தாா்.

திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி ஆணையா் மற்றும் பொறியாளரிடம் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

பின்னா், குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலகத்தின் சுற்றுப்பகுதி தூய்மை குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, குழித்துறை நகா்மன்றத் தலைவா் ஆசைத்தம்பி, ஆணையா் ராமதிலகம், பொறியாளா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT