கன்னியாகுமரி

காவல்துறை புகாா் மனு மேளா: பொதுமக்கள் அளித்த 100 மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை

5th May 2022 02:52 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் அளித்த புகாா்களில், 100 புகாா் மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.என். ஹரிகிரண்பிரசாத் பொறுப்பேற்ற பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 800 புகாா் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் 150 மனுக்கள் மீது தொடா்புடைய காவல் நிலையங்களில் வைத்து விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் பெறப்பட்ட மனுக்கள் அதிகமாக இருந்ததால், புதன்கிழமை ( மே 4) மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், புகாா் மனுக்கள் பெறும் மேளா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் நடைபெற்றது.

இதில் அந்தந்த காவல் நிலையங்களின் அதிகாரிகள் நேரடியாக பங்கேற்று பெறப்பட்ட மனுக்களிலிருந்து 100 மனுக்களின் மீது விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண்பிரசாத் நேரில் சென்று பொதுமக்கள் அளித்த சில மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT