கன்னியாகுமரி

இடையன்விளையில் அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்

5th May 2022 02:55 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: இடையன்விளையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட இடையன்விளையில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட அப்பகுதி மக்கள் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம்,

ADVERTISEMENT

அகஸ்தீசுவரம் பேரூராட்சித் தலைவா் அன்பரசி ராமராஜன் ஆகியோா் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினா்.

இந்நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் பேரூா் அதிமுக செயலா் சிவபாலன், பேரூராட்சி துணைத் தலைவா் சரோஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT