கன்னியாகுமரி

மேலும் 2 இளம்பெண்களுக்கு கரோனா தொற்று

2nd May 2022 01:27 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 2 இளம்பெண்களுக்கு சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில் அருகே சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனா். அவா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல் திங்கள்நகா் பகுதியைச் சோ்ந்த 30 வயது இளம்பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்தப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT