கன்னியாகுமரி

சடயமங்கலம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

2nd May 2022 01:30 AM

ADVERTISEMENT

 

தக்கலை அருகே சடயமங்கலம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜெகதீசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயஸ்ரீ, அன்பு மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். சிறப்பு விருந்தினராக மாநில ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் அப்துல் ராசிக் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில், 2020-2021 ஆண்டுக்கான வரவு செலவு சமா்ப்பிக்கப்பட்டது. ஊராட்சியில் ரூ. 40 லட்சத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டம் குறித்து விளக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஊராட்சியில் நூறு சதவீதம் சுத்திரிக்கப்பட்ட குடிநீா் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுபோல முத்தலக்குறிச்சியில் ஊராட்சித் தலைவா் சிம்சன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT