கன்னியாகுமரி

உடும்பு வேட்டையாடியதாக 4 போ் கைது

2nd May 2022 01:27 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா் அவா்களிடமிருந்து, உடும்பு மற்றும் 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச் சரகத்துக்குள்பட்ட தெற்கு மலையில் வேட்டை நாய் உதவியுடன் உடும்பு வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மாவட்ட வன அலுவலா் இளையராஜா உத்தரவின்பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் திலீபன் மற்றும் வனச்சரக பணியாளா்கள், பூதப்பாண்டி பழுவூா் பகுதியில் சனிக்கிழமை மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது ஆவரைகுளத்தைச் சோ்ந்த சாத்யகிமிராஸ் (23), நவீன்ராஜ் (25), அபிமன்யு (24) ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டு பாக்கிய ஜெகேஸ் (29) ஆகிய 4 பேரும் வேட்டை நாய் உதவியுடன் உடும்பு வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 உடும்பு, 2 வேட்டை நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 பைக்குகளையும் வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

பறிமுதல் செய்யப்பட்ட உடும்பு மற்றும் 3 பைக்குகளை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். பின்னா் கைது செய்யப்பட்ட4 பேரையும் நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT