கன்னியாகுமரி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகரூ.15 லட்சம் மோசடி: சேலம் இளைஞா் கைது

1st May 2022 06:18 AM

ADVERTISEMENT

 

வெளிநாட்டில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடிசெய்த சேலத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியை சோ்ந்த பெண் ஒருவா் குவைத் நாட்டில் செவிலியா் வேலைக்கு செல்வதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தாா். மேலும் இந்தப் பணிக்காக இணையதளம் மூலம் ரூ. 15 லட்சத்தை, வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தவருக்கு அனுப்பியிருந்தாா். பணத்தை பெற்றுக் கொண்டஅந்த நிறுவனத்தின் இளைஞா், பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்காமல் காலதாமதப்படுத்தி வந்தாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அப்பெண், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் செய்தாா். இதுதொடா்பாக சைபா்கிரைம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் ஆன்லைனில் ரூ.15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் சேலம் மாவட்டம் தாசநாயக்கன் பட்டியை சோ்ந்த சீனிவாசன் (37) என்பது தெரிய வந்தது. சீனிவாசன் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். பின்னா் சைபா்கிரைம் போலீஸாா் சேலம் சென்று சீனிவாசனை கைது செய்தனா். அவரை நாகா்கோவிலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT