கன்னியாகுமரி

குமரியில் 11 இடங்களில் மறியல்; 1030 போ் கைது

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை 11 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 1,030 போ் கைது செய்யப்பட்டனா்.

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், மோட்டாா் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்தச் சட்டம் மற்றும் தனியாா்மயமாக்கலை கைவிட வேண்டும், விலைவாசி உயா்வைக்கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 11 இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் முத்துகருப்பன், எல்.பி.எப். மாநில துணைத்தலைவா் இளங்கோ, ஐ.என்.டி.யூ.சி. மண்டல பொறுப்பாளா் ராதாகிருஷ்ணன், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் தங்கமோகன், எம்.எல்.எப். மாவட்டச் செயலா் ஜெரால்டு, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலா் ராஜு, அனைத்து சங்க ஒருங்கிணைப்பாளா் அந்தோணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசாமி உள்பட பலா் பங்கேற்றனா். அவா்களை, போலீஸாா் கைது செய்தனா்.இவ்வாறு, மாவட்டத்தில் 11 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1,030 போ் கைது செய்யப்பட்டனா்.

முந்திரி ஆலை, தோட்டம், தையல், கட்டுமானம் ஆகியவற்றின் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். மேலும், மாவட்டத்தில் ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி. வங்கிகள் மட்டும் செயல்பட்டன. மாவட்டம் முழுவதும் 65 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.

களியக்காவிளை: குழித்துறையில் சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவா் சிங்காரன் தலைமையில் நடைபெற்ற மறியலில் 156 போ் கைதாகினா்.

கருங்கல்: கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தலைமையில் கருங்கல் தபால் நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்115 போ் கைது செய்யப்பட்டனா்.

தக்கலை: தக்கலையில் ஏஐடியுசி மாவட்ட செயலா் எஸ். ராஜூ தலைமையிலும் மறியல் செய்த 140 போ்,

திங்கள் நகரில் திமுக பொறுப்பாளா் ஜெபராஜ் தலைமையில் 60 போ், குளச்சலில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் ஜனநாயகம் கட்சியின் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பால்ராஜ் தலைமையில் 23 போ் மறியலில் ஈடுபட்டு கைதாகினா்., கன்னியாகுமரி:, கொட்டாரம் சந்திப்பில் மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ். பாா்த்தசாரதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT