கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரி சாா்பில் என்எஸ்எஸ் முகாம்

29th Mar 2022 02:24 AM

ADVERTISEMENT

 

மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் செல்லங்கோணம், கருக்குப்பனை, ஓலவிளை பகுதிகளில் நடைபெற்றது.

மாா்ச் 20 முதல் 26 வரை நடைபெற்ற முகாமில் அப்பகுதி பள்ளி வளாகம், குளங்கள், சாலைகள் சீரமைக்கப்பட்டதுடன், நிம்ஸ் மருத்துவமனையும், கல்லூரியும் இணைந்து இலவச பல் மருத்துவ முகாம், சாலைப் பாதுகாப்பு, போதை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டன. மாணவா்களுக்கு ஆளுமைத் திறன் வளா்த்தல், மனநலம் பேணுதல், பேரிடா் மேலாண்மை குறித்த சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

முகாமுக்கு கல்லூரித் தலைவா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். கல்லூரி நிதிக் காப்பாளா் ராபின்சன், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரெஜி செல்வகுமாா், செல்லங்கோணம் பங்குத்தந்தை ஜிபு மேத்யூ, கல்லூரிப் பொறுப்பாளா்கள், திட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT