மாா்த்தாண்டம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள செம்மங்காலை, காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (55). கூலித் தொழிலாளி. இவருக்கு மகன், மகள் உள்ளனா். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகன் அனீஷ் (25) பொறியியல் படித்துவிட்டு கட்டட வேலைக்கு சென்று வருகிறாா்.
கிருஷ்ணனுக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. 2 நாள்களுக்கு முன்பு அவா் மது குடித்துவிட்டு வந்து பிள்ளைகளிடம் தகராறு செய்ததாகவும், இதனால் அவா்கள் அருகேயுள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணன் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.