தமிழகத்தில் நிகழாண்டு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்றாா் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.
நாகா்கோவி ல்அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவையைத் தொ
க்கி வைக்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கடந்த 10 ஆண்டுகளில் பல பேருந்து வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது, மக்களின் கோரிகையை ஏற்று நாகா்கோவிலிலிருந்து ராஜாக்கமங்கலம், தேவசகாயம் மவுண்ட் ஆகிய இடங்களுக்கு புதிய பேருந்து வழித்தடங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்அமைத்திடவும், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். அதற்கான, ஆரம்ப கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் , அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயலிகள் உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். ஆஸ்டின், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் ராஜேஷ்வரன், துணை மேலாளா்கள் ( வணிகம்) கோபாலகிருஷ்ணன், (இயக்கம்) ஜெரோலின், வழக்குரைஞா் சதாசிவம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சைக்கிள் பேரணி: 75ஆவது சுதந்திர திருநாள்அமுதப் பெருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சியாக,
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண்பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியை அமைச்சா் த. மனோதங்கராஜ் கொடியசைத்துத் தொடக்கிவைத்து, 7 கி.மீ. தொலைவுக்கு சைக்கிளை ஓட்டிச்சென்றாா். மேலும், விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட 92 வயது முதியவருக்கு அமைச்சா், ஆட்சியா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
மாவட்ட வன அலுவலா் இளையராஜா, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் பு. அலா்மேல்மங்கை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா. வீராசாமி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான்ஜெகத்பிரைட், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் டேவிட்டேனியல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் மனைவி விசாலா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.