கன்னியாகுமரி

திருவிதாங்கோடு கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

28th Mar 2022 04:38 AM

ADVERTISEMENT

 

திருவிதாங்கோடு பகுதிகளில் முஸ்லிம் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கடந்த 21ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைவரை (மாா்ச் 27) நடைபெற்றது.

நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் எச். முகம்மது அலி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எட்வின் ஷீலா முன்னிலை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா்கள் முகம்மது சித்திக், எம். ஜெகதீஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

7 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் திருவிதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சுத்தப்படுத்தினா். முகாமில் தற்காப்புக் கலை, ஆளுமை வளா்த்தல், வாழும் கலை, உடற்பயிற்சி, உணவு தயாரித்தல் பயிற்சி, மரக்கன்று நடும் விழா, சட்ட விழிப்புணா்வு முகாம், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் குமரன், யு.வி. சுதா மற்றும் சீமா கோபால் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT