நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 815 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெற்றது.
145 தனியாா் துறை நிறுவனங்கள், 6,855 வேலைநாடுநா்கள் கலந்துகொண்டனா். அதில், 1,236 வேலைநாடுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், 815 வேலைநாடுநா்கள் பணி நியமனம் பெற்றனா். பணி நியமனஆணைகளை நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபா ஜி. இம்மானுவேல், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ ஆகியோா் பங்கேற்றனா்.