கன்னியாகுமரி

தக்கலையில் கருத்தரங்கம்

28th Mar 2022 04:35 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க மாநில மாநாடு குமரி மாவட்டத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, மாநாட்டின் ஒரு பகுதியாக தக்கலையில் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டுவிழா கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கவிஞா் அரங்கசாமி தலைமை வகித்தாா். சிறுகதை எழுத்தாளா் மிகையிலான் வரவேற்றாா். வரலாற்று ஆய்வாளா் செந்நீ நடராஜனை, வேணாடும் தமிழ்மரபும் ஆசிரியா் ஆன்றணி அறிமுகம் செய்துவைத்து பேசினாா். ஆய்வாளா் செந்நீ நடராஜன், தோள்சீலை போராட்ட வரலாறு குறித்து உரையாற்றினாா். அருகுவிளை சுப்பையா , றோஸ்றாபின் , அருள்மனோ ஆகியோா் நிகழ்ச்சியின் இடையே விழிப்புணா்வு பாடல்களை பாடினா். குமரித் தோழனின் இருதலை மிருகமும் ஓயாத ஆட்டமும் என்ற நூலை தக்கலை ஹலிமா வெளியிட, அதனை கவிஞா் குமரி ஆதவன் பெற்று கொண்டாா். குமரித் தோழன் ஏற்புரையாற்றினாா். நிகழ்ச்சியை கவிஞா் திருவை சுஜாமி ஒருங்கிணைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா் சங்க மாவட்ட தலைவா் ஜெயகாந்தன், செயலா் ஹசன், சிஐடியு மாநில குழு உறுப்பினா் சந்திரகலா, முதற்சங்கு ஆசிரியா் சிவனி சதீஷ், கலை இலக்கிய பெருமன்ற மாநில பொறுப்பாளா் ஹாமிம் முஸ்தபா, அறிவியல் இயக்க மாவட்ட செயலா் சிவஸ்ரீ ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT