களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியிலிருந்து செம்மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளா் எழிலரசி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்த சைகை காட்டியபோது போலீஸாரை கண்டதும் ஓட்டுநா் மினி லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினாராம். போலீஸாரின் சோதனையில், மினி லாரியில் செம்மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.