கன்னியாகுமரி

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் நூதனஆா்ப்பாட்டம்

25th Mar 2022 12:59 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலா் மோகன் தலைமை வகித்தாா்.

சமையல் எரிவாயு உருளையை இருசக்கர வாகனத்தில் வைத்து கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அந்தோணி, நிா்வாகிகள் கிருஷ்ணன், நாகராஜன், பரமசிவன் உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, கட்சியின் குலசேகரம் வட்டாரச் செயலா் விஸ்வம்பரன் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் அண்ணாதுரை, நடராஜன், ஸ்டாலின்தாஸ், செல்வராஜ், சதீஷ், ஜூடஸ் குமாா், சுபாஷ் கென்னடி, ஜெனித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், அவற்றின் விலைகளை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT