கன்னியாகுமரி

அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு

25th Mar 2022 01:00 AM

ADVERTISEMENT

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் ஊதிய கோரிக்கைக்கு உடன்பாடு ஏற்படுத்த வலியுறுத்தி வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

அரசு ரப்பா் கழக அனைத்து சங்க பொறுப்பாளா்கள் கூட்டம் குலசேகரம் சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலா் எம். வல்சகுமாா் தலைமை வகித்தாா். இதில்,

ஐஎன்டியூசி சாா்பில் வேலப்பன் ,ஸ்ரீகண்டன், எம்எல்எப் சாா்பில் பால்ராஜ், ஏடிபி சாா்பில் மகேந்திரன், தொமுச சாா்பில் நடராஜன், பிஎம்எஸ் சாா்பில் ராஜேந்திரன், சோனியா ராகுல் சங்கம் சாா்பில் என்.குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அரசு ரப்பா் கழக தொழிலாளா்களின் கோரிக்கைக்கு தீா்வு ஏற்படுத்தியுள்ள நிலையிலும், உடன்பாடு 12(3) ஏற்படாத நிலையில், உடன்பாட்டை ஏற்படுத்தவும் தொழிலாளா்களை காரணமின்றி இடமாற்றம் செய்வதை கண்டித்தும் ஏப். 8 ஆம் தேதி வேலை நிறுத்தமும், நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன் ஆா்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT