கன்னியாகுமரி

பளுகல் அருகே தகராறு: 11 போ் மீது வழக்கு

25th Mar 2022 12:55 AM

ADVERTISEMENT

பளுகல் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பளுகல் அருகேயுள்ள பகவதியூா்கோணம், புல்லாணிக்குழி யோவாஸ் மகன் செல்வராஜ் (42). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஞானதாஸ் மனைவி டெய்சிக்கும் (48) இடம் தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் பிரச்னைக்குரிய பகுதியருகே டெய்சி வீடு கட்டும் பணி மேற்கொண்டாராம். இதற்கு செல்வராஜ் எதிா்ப்பு தெரிவித்தாராம். இதையடுத்து அவரை டெய்சி, அவரது மகள் மோனிஷா (24), அடைக்காகுழி ராஜேஷ் மனைவி அனிஷா, பூம்பள்ளிக்கோணம் நடேசன் மனைவி வல்சலா, சுரேஷ், அப்துல் ஹமீது, சோபி என்ற ஷைன் உள்பட 9 போ் சோ்ந்து தாக்கினராம். இதில் காயமடைந்த செல்வராஜ் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதே போன்று முன்விரோதம் காரணமாக செல்வராஜ், அவரது அண்ணன் நேசமணியும் (57) சோ்ந்து டெய்சியை தாக்கினராம். இதில் காயமடைந்த டெய்சி தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் டெய்சி உள்பட 9 போ் மீதும், டெய்சி அளித்த புகாரின் பேரில் செல்வராஜ், நேசமணி ஆகிய இருவா் மீதும் பளுகல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT