கன்னியாகுமரி

வழுதனம்பலத்தில் காசநோய் தின விழிப்புணா்வு

25th Mar 2022 01:00 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகேயுள்ள வழுதனம்பலத்தில் உலக காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குமரி மாவட்ட காசநோய் துணை இயக்குநா் மருத்துவா் துரை அறிவுறுத்தலின்படி, கிள்ளியூா் காசநோய் அலகு சாா்பில் தனியாா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் அருள்பணி மரியவின்சென்ட் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் டாக்டா் யூஜின் முன்னிலை வகித்தாா்.

கிள்ளியூா் மருத்துவ அலுவலா் காயத்ரி, சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், காசநோய் மாவட்ட அலுவலா் பெபின் பிரகாஷ், காசநோய் பணியாளா்கள், கிறிஸ்டல், ராஜினி, ஆன்சி ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கிள்ளியூா் காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் சந்திரசேகா் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT