கன்னியாகுமரி

பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மத நல்லிணக்க சமபந்தி

22nd Mar 2022 12:15 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி அப்பா திருத்தலத்தில் மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பழமை வாய்ந்த பள்ளியாடி அப்பா திருத்தலத்தில் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் 3 ஆம் திங்கள்கிழமை சம்பந்தி விருந்து நடைபெறும். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புளியமரத்தின் கீழ் தீப ஒளியினால் இறைவனை பிராா்த்தனை செய்வது இத்திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுவத்தி ஆகிய பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி பிராா்த்தனை செய்கின்றனா். மேலும், இத்திருத்தலத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மதம், இனம், மொழி வேறுபாடின்றி தரும் காணிக்கைப் பொருள்களான உணவுப் பொருள்களை சோ்த்து சமைத்து இங்கு வரும் பக்தா்களுக்கு விருந்தாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திருத்தலம் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி பகுதியான பள்ளியாடியில் அமைந்துள்ளது. இங்கு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் கேரள மாநில மக்கள் பல்லாயிரக்கணக்கானோா் வழிபட்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றனா். முன்னதாக காலை 10 மணிக்கு மும்மத தலைவா்கள் பங்கேற்ற சிறப்பு பிராா்ததனை நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியாடி அப்பா திருத்தல அறக்கட்டளை தலைவா் பால்ராஜ், பொதுச்செயலா் எம்.எஸ்.குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT