கன்னியாகுமரி

பறவைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து லடாக் வரை பைக் பயணம்

22nd Mar 2022 12:15 AM

ADVERTISEMENT

ஸ்ரீ ஆனந்தா கல்பா நிறுவனம் சாா்பில், பறவைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து லடாக் வரை பைக் பயணம் திங்கள்கிழமை தொடங்கியது.

உலகம் முழுவதும் காடுகளை உருவாக்கியதில் பறவைகள் பங்கு மிகவும் அதிகம் என்பதால், பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பைக் பயணம் நடைபெறுகிறது. பறவைகள் ஆா்வலா் பிரம்ம ரிஷி தலைமையில் பறவைகள் ஆா்வலா்கள் 9 போ் இப்பயணக்குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தொடங்கிய இப்பயணம், பல்வேறு மாநிலங்கள் வழியாக காஷ்மீரின் லடாக்கை சென்றடைகிறது.

தொடக்க விழா நிகழ்வில், மாத்தாா் நாடாா் மகாஜன சங்க பாா்மஸி கல்லூரி முதல்வா் எழில், நியூ பாரத் டிரஸ்ட் தலைவா் டாக்டா் ஆா்.அருண்குமாா், செயலா் என்.டி.பெருமாள், திருச்சி மாரல் பவுண்டேசன் நிறுவனா் விவேகானந்தன் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT