மாா்த்தாண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே கீழ்பம்மம், பொற்றவிளாகம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் சங்கா் (39). வாகனப் பழுதுநீக்கும் தொழில் செய்துவந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டு முன் நின்றிருந்த பப்பாளி மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது அந்த மரம் வீட்டு மின் இணைப்பு வயா் மீது விழுந்துள்ளது. மரத்தை அகற்ற முயன்றபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.